21 January 2009

பிரபஞ்சத்தை சுத்திப் பார்க்கலாம் வாங்க II

பிரபஞ்சம் பற்றிய முன்னைய பதிவுகளை பார்ப்பதற்கு இங்கே செல்லவும்...
பிரபஞ்சத்தை சுத்திப் பார்க்கலாம் வாங்க I

தொலை நோக்கிகள் (Telescopes)
எப்பிடியான தொலை நோக்கிகளை (Telescopes) வானியல் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்துறாங்க என்ற விடயத்தை இந்த இடத்தில பார்ப்போம்...

வானொலி அலை தொலைநோக்கிகள் (Radio Wave Telescopes)
எங்களால் வானொலி அலைகளைக் கேட்க முடியாது. ஆனால் வானொலிக் கருவிகள் மின்காந்தக் கதிர்வீச்சுக்களை (Electromagnetic Radiation) ஒலிச்சக்தியாக மாற்றக்கூடிய வல்லமை உடையவை என்பதால் எம்மால் அவற்றைச் செவிமடுக்க முடியும்.


உலகின் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கி: Puerto Rico இல்
20 ஏக்கர் பரப்பளவில் 1000 அடிகள் குறுக்குவெட்டையும்
167 அடிகள் ஆழத்தையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது
வானொலி தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட
பால் வீதி நட்சத்திரத் தொகுதி. அம்புக்குறி சுட்டிக்
காட்டுவது சுப்பநோவா (Supernova)
அகச்சிவப்பு தொலைநோக்கிகள் (Infrared Telescopes)
எமது உடல் அகச்சிவப்பு கதிர்வீச்சை வெப்பமாகவே உணர்ந்துகொள்கிறது.

ஹாவாயிலுள்ள (Hawaii) அகச்சிவப்பு தொலைநோக்கி

அகச்சிவப்பு தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட
வியாழனின் (Jupiter) மேற்பரப்பு
கட்புலனாகும் ஒளி தொலைநோக்கிகள் (Visible Light Telescopes)
பார்வையூடகமாக வளிமண்டலம் இல்லாத காரணத்தால் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் பிடிக்கப்பட்ட படங்கள் புவிமேற்பரப்பிலிருந்து பிடிக்கப்பட்டவற்றை விடத் தெளிவாக உள்ளன.

ஹப்பிள் (Hubble) தொலைநோக்கி: விண்வெளியில்
மிதந்து கொண்டிருக்கும் ஒளி தொலைநோக்கி

ஹப்பிள் தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட
நட்சத்திரத் தொகுதிகள் (Galaxies)
புறஊதா தொலைநோக்கிகள் (Ultraviolet Telescopes)
எமது வளிமண்டலம் புறஊதா கதிர்வீச்சுக்களை தடைசெய்வதனால் புறஊதா தொலைநோக்கி விண்வெளியிலேயே நிலைப்படுத்தப்பட வேண்டும்
விண்கலமொன்றிலிருந்து விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
ஹொப்கின்ஸ் (Hopkins) புறஊதா தொலைநோக்கி


புறஊதா தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட
சூரியனின் மேற்பரப்பிலுள்ள சுவாலைகள் (coronal loops)
X-கதிர் தொலைநோக்கிகள் (X-Ray Telescopes)

சந்ரா (Chandra) X-கதிர் தொலைநோக்கி

X-கதிர் தொலைநோக்கி மூலம் படம் பிடிக்கப்பட்ட
கருந்துளை (black hole)
காமா கதிர் தொலைநோக்கிகள் (Gamma Ray Telescopes)
அணு வெடிப்புகளை/பிளவுகளை (Nuclear Explosions) போலவே நட்சத்திரங்களும் காமா கதிர்களை வெளிவிடுகின்றன.

Mt. Hopkins, அரிசோனாவிலுள்ள (Arizona) காமா கதிர் தொலைநோக்கி

காமா கதிர் தொலைநோக்கி மூலம் தொடராக படம் பிடிக்கப்பட்ட
நட்சத்திரமொன்றின் வெடிப்பு (sequence of an exploding star)



6 comments:

வடுவூர் குமார் said...

கடைசி படத்தில் உள்ள நட்சத்திர வெடிப்பில்,நட்சத்திர அளவு வேறுபடாதா? இல்லை கணிக்கமுடியாதா?

RAMASUBRAMANIA SHARMA said...

Good photographic informations....Thanks

kankaatchi.blogspot.com said...

Photos and information-good

தேவன் மாயம் said...

பிரபஞ்சம் பற்றியும் தொலை நோக்கி பற்றியும் உங்கள் பதிவு அருமை...

Arulkaran said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வடுவூர் குமார்.. இதை பின்னூட்டத்தில் விளங்கப்படுத்துவது சற்று கடினமானது. இதைப்பற்றி தனியான ஒரு பதிவில் சொல்கிறேன்.

இருந்தாலும், சின்ன விளக்கம்... எமது சூரியன் போன்ற ஒரு நட்சத்திரமாயின் எரிபொருளான ஐதரசன்(H) முழுவதும் காலியானதும் மையவெப்பநிலை சடுதியாக அதிகரித்து (அண்ணளவாக 200 மில்லியன் உஷ்ண அளவுகள்-degrees) விட்டம் வழியே 100 மடங்கு வரையில் விரிவடைந்து, பிரகாசமாகி பின்னர் வெடிக்கத் தொடங்கும். குறைந்த திணிவுள்ள நட்சத்திரமாயின் இது வேறுபடும்...

Arulkaran said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ராமசுப்ரமணிய சர்மா, என்பார்வையில் மற்றும் தேவன்மாயம்...

Post a Comment