22 January 2009

மரணத்தின் தேசம்

போரென்ற பேயொன்று பொங்கி எழுந்து வந்து
நாளும் பொழுதும் நரபலிகள் எடுப்பது
நாளை முடியுமென்ற நம்பிக்கையும் இல்லை

எட்டுத் திசைகளும் எதிரொலி எழுப்பும்
மரணித்து விழுபவர் மரண ஓலங்கள்
மறைந்து விடுமென்ற மயக்கமும் இல்லை

நாடிழந்து நகரிழந்து வீடிழந்து விதியென்று
காடுமிழந்து கடைசியாய் நாதியற்று நடுவீதியிலே
கொத்துக் கொத்தாக கோரமாய் கொலையுண்டு

பத்துப் பதினைந்தாய் நித்தமும் பலி கொடுத்து
வாழ்நாள் முழுவதும் வலியோடு வாழுகின்ற
தலைவிதியோ தமிழினமே தரணியிலே உனக்கு

முன்னொரு காலத்திலே மூத்த குடிகளாய்
தரணியிலே பரணிபாடி தலை நிமிர்ந்து வாழ்ந்தாலும்
இவைதான் இன்றெமது அடையாள சின்னமாய்

4 comments:

தேவன் மாயம் said...

முன்னொரு காலத்திலே மூத்த குடிகளாய்
தரணியிலே பரணிபாடி தலை நிமிர்ந்து வாழ்ந்தாலும்
இவைதான் இன்றெமது அடையாள சின்னமா//

அருள்கரன்!!!
சிறப்பான
வரிகளில்
உங்கள் குமுறலைச்சொல்லியுள்ளீர்கள்
தேவா.........

Arulkaran said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேவா...

kankaatchi.blogspot.com said...

After giving birth to the seeds
the tress die
From the seeds comes new life
This will go on in this earth for ever
We are also to undergo the same process
Hence no cause for any worry
Enjoy the present moment happily
by making others happy
Mitigate the sufferings of others in whatever possible way
Think no evil
Do no evil
Seek no evil.

Arulkaran said...

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி என்பார்வையில்... நல்ல சிந்தனைகள்...

Post a Comment