.jpg)
.jpg)
ஒருவர் காதலில் விழுந்துவிட்டால் தன்னைச் சுற்றியுள்ளவற்றின் மீதான அவருடைய பார்வை முற்றிலும் மாறிவிடுகிறது. காதலின் தாக்கம் அவர்களை எப்படியெல்லாம் பாடுபடுத்துகிறது என்பதை எழுத்தில் வடிப்பது
முடியாத காரியம். அவர்களை மட்டுமா...!!! சுற்றி இருப்பவர்களையும் அல்லவா...! காதல், ஒரு அழகான வண்ணத்துப் பூச்சி போன்றது. அந்த அழகான வண்ணத்துப் பூச்சி எப்போது எந்த மலரின் மேல் வந்து அமரும் என்று சொல்லமுடியாது? காதல், ஒரு வானவில் போன்றது. வானவில் எப்படித் திடீரெனத் தோன்றி வர்ணஜாலங்களைக் காட்டி எம்மையெல்லாம் சந்தோஷப்படுத்திவிட்டு மறைந்து விடுகிறதோ... காதலும் அப்படித்தான். ஆனாலும் காதலுக்கும் காதலிக்குமொரு உள்ளத்திற்குமாய் காத்திருப்பது சுகம்தான் போலும்??? (எங்கேயோ படித்த ஞாபகம்)
.jpg)
.gif)
காதல் அமைதியாகவே வருகிறது. அது
வரும்போது எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களோ அறிவிப்புக்களோ மின்னல்களோ இல்லாமல்தான் வருகிறது. காதலென்பது இந்த உலகத்தில் நிறைந்திருக்கும் கவித்துவமான ஒரு சக்தி... காதல் ஒரு ஈர்ப்பு... அது சத்தியமானது... சுயஒழுக்கமானது... மறுக்க முடியாதது... சுதந்திரமானது... கட்டுப்படுத்த முடியாதது...
.jpg)
காதலினால் எதை அடைய முடியும்??? மகிழ்ச்சி!!! (Happiness), ஆத்ம திருப்தி!!! (Satisfaction of the Soul), அனுபவம்!!! (Experience) இன்னும் சொல்லப் போனால்
வலிகள்!!! பெரும்பாலான சந்தர்ப்பங்களில்...!!! (Pain) யாரோ ஒருவர் எங்களுக்காக அக்கறை எடுத்துக்கொள்கிறார் என்றோ எங்களைபற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார் என்றோ நாங்கள் உணர்கிற போது காதல் என்பது நிச்சயமாக ஒரு உன்னதமான உணர்வுதான்... அது இரண்டு ஆத்மாக்களின் முழுமையான ஒன்றிப்பு... காதல் என்பது கொஞ்சமாகமோ அல்லது அதிகமாகவோ எல்லோருக்கும் முக்கியமானது தான்... ஒவ்வொருவருக்கும் தேவையானது காதலே...!!!
.jpg)
.jpg)
சிலர் காதலில் தோற்று(???) விட்டால், வாழ்க்கையே தொலைந்து
போய்விட்டது போல் கவலைப்படுகின்றார்கள். உண்மையில் காதலென்பது வாழ்க்கையின் ஒரு அழகான அற்புதமான பகுதி மட்டுமே... காதலே வாழ்க்கையாகிவிடாது. காதலில் தோற்று விட்டோம் என்று கவலையோடு இடிந்து போய் உட்கார்ந்து விடுவது, கண்ணாடி பொம்மை உடைந்து விட்டதேயென்று சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும் சின்னஞ்சிறிய குழந்தையின் செயலைப் போன்றது... (எங்கேயோ படித்த ஞாபகம்)
.jpg)
.jpg)
சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகளிலிருந்து... ஒருமுறை நான் எனது சிறுபராயத்து தோழியைச் சந்தித்தேன். நாங்கள் ஒரு தடாகத்தின் கரையில்
அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அவள் சிறிதளவு நீரை தன்னுடைய உள்ளங்கையில் நிரப்பி அதை எனக்கு முன்பாக நீட்டியபடியே சொன்னாள்... 'எனது கையில் தேங்கியுள்ள நீரை கவனமாகப் பாருங்கள். இது காதலை குறிப்புணர்த்துகிறது... உங்களுடைய கையை அக்கறையுடன் திறந்து வைத்து அதை அங்கேயே இருப்பதற்கு எவ்வளவு நீண்ட காலம் அனுமதிக்கிறீர்களோ, எப்பொழுதும் அது அங்கேயே இருக்கும். ஆனால், உங்கள் விரல்களை முழுவதுமாக மூடி அதை உங்களுடையதாக்க முயன்றீர்களானால், அது தான் கண்டுபிடிக்கிற முதல் இடைவெளியூடாக வெளியேறவே செய்யும்.
.jpg)
பெரும்பாலானவர்கள் காதலில் விடும் மிகப்பெரிய தவறு இதுதான். அவர்கள்
.jpg)

ஆதலால் நண்பர்களே, காதலியுங்கள்... காதலிக்கப்படுங்கள்... இந்தப் பூமியையே காதலால் நிரப்புங்கள்...